sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

உலகம் செழிக்க வேண்டும்

/

உலகம் செழிக்க வேண்டும்

உலகம் செழிக்க வேண்டும்

உலகம் செழிக்க வேண்டும்


ADDED : ஜூன் 15, 2010 12:06 PM

Google News

ADDED : ஜூன் 15, 2010 12:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* அறிவின் வடிவமாய்த் திகழும் கண்ணனே! எங்கள் உயிரில் கலந்த இன்னமுதே! அறவழியில் நடந்து சத்தியத்தை நிலைநாட்டியவனே! கீதை என்னும் ஞானமொழியை அமிர்த மழைபோல் பொழிந்தவனே! எங்களுக்கு வாழ்வளிக்க வந்த வள்ளலே! உன் பாதமலர்களைப் போற்றுகிறோம்.

* ஒப்பில்லாத உயர்வாழ்வும், கல்வியும், வீரமும், நல்லாட்சியும், தவறாத தர்ம சிந்தனையும் கொண்டு இவ்வுலகம் செழிப்போடு வாழ உன்திருவடிகளைப் பணிந்து போற்றுகிறோம்.

* கண்ணா! எங்கள் பகைவர்களை வேரோடும், வேரடி மண்ணோடும் வெந்து போகும்படி பொசுக்கி விடு. உன் புகழினை எக்காலமும் போற்றித் துதித்திடவும், அன்புடன் உன் புகழ்பாடி உன் ஆணைப்படி நடக்கவும் அருள்தா.

* நந்தகோபனே! காக்கைச் சிறகினில் உன் கரிய நிறத்தையும், பார்க்கும் மரங்களில் எல்லாம் உன் பச்சை வண்ணத்தையும் கண்டோம். கேட்கும் ஒலிகளில் எல்லாம் உன் புகழினைக் கேட்டோம். சுடும் தீயில் விரலை வைத்தால் கூட உன்னைத் தீண்டும் இன்பம் கண்டோம்.

* தெய்வ பக்தி உண்மையானால் பரோபகாரமே அங்கு இருக்கும். பரோபகாரம் இல்லாத இடத்தில் தெய்வ பக்தி வேஷத்தைத் தவிர வேறொன்றுமில்லை

-பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us